வசூலில் வேகமெடுக்கும் என்ஜிகே; டாப் 10 வரிசையில் இடம்பெற்ற சூர்யா.!

வசூலில் வேகமெடுக்கும் என்ஜிகே; டாப் 10 வரிசையில் இடம்பெற்ற சூர்யா.!


selvaragavan---actor-surya---ngk---collection-report

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான படம் என்ஜிகே. இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த  திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ராகுல் பிரீத் சிங் சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

surya

இந்தாண்டு வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது என்ஜிகே.
1. அஜித்தின் விஸ்வாசம் சென்னையில் 88 லட்சம் வசூல் செய்ததோடு தமிழ்நாட்டில் 1.21 கோடி ரூபாயை முதல் நாள் வசூல் செய்தது.
2. அவெஞ்சர்ஸ் ரூ. 1.17 கோடி வசூல் 
3. பேட்ட ரூ. 1.12 கோடி வசூல் செய்தது.
4. சூர்யாவின் என்ஜிகே ரூ. 1.03 கோடி வசூல் செய்துள்ளது. 

இதுவரை தமிழ் திரைப்படங்களில் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் சூர்யாவின் என்ஜிகே 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

1. 2.O  ரூ. 2.64 கோடி, 2. சர்கார்  ரூ. 2.41 கோடி, 3. காலா  ரூ. 1.76 கோடி, 4. மெர்சல்  ரூ. 1.52கோடி, 5. விவேகம்  ரூ. 1.21 கோடி, 6. எண்ட்கேம்  ரூ. 1.17 கோடி, 7. கபாலி  ரூ. 1.12 கோடி, 8. பேட்ட  ரூ. 1.12 கோடி, 9. தெறி  ரூ. 1.05 கோடி, 10. என்ஜிகே  ரூ. 1.03 கோடி