சினிமா

அட.. ட்ரைலரே சும்மா அதிரவிடுதே! எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜிவி பிரகாஷின் செல்பி ட்ரெய்லர்! வீடியோ இதோ!!

Summary:

அட.. ட்ரைலரே சும்மா அதிரவிடுதே! எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜிவி பிரகாஷின் செல்பி ட்ரெய்லர்! வீடியோ இதோ!!

மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் செல்பி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியீட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செல்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதில் ஜிவி பிரகாஷ் பொறியியல் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன் கல்லூரியை ஆட்டிப்படைக்கும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர்களைத் தொடர்ந்து இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இதில் கௌதம் மேனன் எதிர்பார்த்ததைவிட மிரட்டலான தோணியில் நடித்துள்ளார். செல்பி திரைப்படம் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் திரைவாழ்க்கையில் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement