சினிமா

சீதக்காதி: வெளியானது அய்யா விஜய் சேதுபதியின் வாழ்க்கையை சித்திரிக்கும் பாடல் வரிகள்!

Summary:

Seethakaathi song lyrics released

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் 'அவன்' பாடலின் வரிகள் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லரில் பலரும் கேட்கும் கேள்வி அய்யா எங்க, அய்யா எங்க என்பது தான்.

அய்யா படப்பிடிப்புக்கு வராமல் இருப்பதால் சினிமா தயாரிப்பாளர்கள் கோபம் அடைவது போன்று காட்டியுள்ளனர். அதில் ஒருவர் அய்யாவை சினிமாவில் இருந்து காலி பண்ணிவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இப்படி ட்ரெய்லர் முழுவதும் அய்யா அய்யா என்ற வார்த்தையே ஒலித்தது. இதனைத்தொடர்ந்து அந்த அய்யாவின் வாழ்க்கையை குறிப்பிடும் படத்தின் ஒரு பாடலின் வரிகள் இப்போது வெளியாகியுள்ளது. பாடல் முழுவதும் வரும் அவன், அவன் எனும் வார்த்தைகள் அய்யாவின் வாழ்க்கையை சித்திரிக்கின்றன.


Advertisement