சினிமா

"அரசாங்கம் யாருக்காக?" நீதிமன்றத்தில் முறையுடும் விஜய் சேதுபதியின் வீடியோ

Summary:

Seethakaathi promo video

விஜய் சேதுபதி நடித்து டிசம்பர் 20 ஆம் தேதி வெளிவரவுள்ள சீதக்காதி படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லரில் பலரும் கேட்கும் கேள்வி அய்யா எங்க, அய்யா எங்க என்பது தான். அய்யா படப்பிடிப்புக்கு வராமல் இருப்பதால் சினிமா தயாரிப்பாளர்கள் கோபம் அடைவது போன்று காட்டியுள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி வெளிவரவுள்ள சீதக்காதி படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி அரசாங்கம் யாருக்காக என்ற கேள்வியை நீதிமன்றத்தில் கேட்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. 


Advertisement