திரை தீ பிடிக்கும்..ரோலக்ஸ் சூர்யா என்ட்ரியின் போது பற்றி எரிந்த திரை.! வைரலாகும் வீடியோ.!

திரை தீ பிடிக்கும்..ரோலக்ஸ் சூர்யா என்ட்ரியின் போது பற்றி எரிந்த திரை.! வைரலாகும் வீடியோ.!


screen-fire-in-theatre-while-surya-entry-in-vikram

கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அசத்தலாக நடித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

அவர் படத்தில் கடைசி மூன்று நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் திரையரங்கையே அதிர வைத்துள்ளார். விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் காலாப்பட்டில் உள்ள ஜெயா திரையரங்கில் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. அப்பொழுது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலெக்ஸ் சூர்யா என்ட்ரி கொடுக்கும்போது திரை தீ பற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்த வீடியோவை நெட்டிசன்கள், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற திரை தீப்பிடிக்கும் பாடலை பின்னணியில் போட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின்கசிவு காரணமாக திரையில் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.