சினிமா

அஜித்தை சைட் அடிச்சு வசமாக மாட்டிக்கொண்ட பிரபல இளம்நடிகை.! தல என்ன செய்துள்ளார் தெரியுமா?

Summary:

sbirami talk about ajith

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
 
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 
பின்னர் ஒருசில காரணங்களால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில்  குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்.

bigg boss abirami with ajith க்கான பட முடிவு

இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல் வேலையாக அஜித்துடன் தான் இணைந்து நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய அவர் கூறியதாவது, பெளர்ணமி அன்று முழுநிலவைதான் பார்ப்பது போல, அஜித் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தா நான் அவரை தவிர வேற எதையும் பார்க்கமாட்டேன் .

 உதவி இயக்குநர் ஷார்ட் பத்தி சொல்லிகிட்டே இருப்பார். ஆனால்  என்னோட முழு பார்வையும் அஜித் சார் மேலேதான் இருக்கும். அப்படிதான் ஒருநாள் அஜித் சாரை சைட் அடிச்சு, அவர்கிட்ட மாட்டிக்கிட்டேன். நான் பார்ப்பதை அவர் பார்த்ததும், சின்னதா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சிட்டு போய்விட்டார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாம்பார் சாதம் செய்து கொடுத்துள்ளார் என சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.


Advertisement