ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! லைக்குகளை குவிக்கும் வீடியோ!

ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! லைக்குகளை குவிக்கும் வீடியோ!



Sayisha dance video viral

தமிழ் சினிமாவில் வனமகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அவர் நடித்த முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து சாயிஷா கடைகுட்டிசிங்கம், ஜூங்க,  கஜினிகாந்த், காப்பான் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவருடன் ஜோடியாக நடித்த நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சிறந்த காதல் ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவிவரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். லைவ் சாட், டிக் டாக், டான்ஸ்,சமையல் என பொழுதுபோக்கி வருகின்றனர்.

sayisha

இந்நிலையில் ஊரடங்கால் வீட்டிலிருக்கும் நடிகை சாயிஷா பாடல் ஒன்றிற்கு மிகவும் அருமையாக நடனம் ஆடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் லைக்குகளை குவித்து வருகின்றது.