ஒரு படத்தின் ஹீரோ, வில்லனே இதுதான்.! ஜோசியம் பார்த்து படம் எடுக்க வராதீங்க.! நடிகர் சத்யராஜ் பேச்சு!!sathyaraj-speech-in-theerkkatharisi-movie-audio-launch

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் தற்போது பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் தீர்க்கதரிசி என்ற படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தில் அவர் அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய சத்யராஜ் கூறுகையில், படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்து தெரிந்திருப்பது அவசியம். ஒரு படத்தோட ஹீரோ, வில்லன் எல்லாமே கதைதான். எனவே நல்ல கதையம்சம் கொண்ட ஒரு படத்தை நீங்கள் எடுத்தால் அப்படம் கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றியடையும். அதை விட்டுவிட்டு ஜோசியம் பார்த்து படம் எடுக்க வரக்கூடாது.

Sathyaraj

சினிமாவில் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பது எளிது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பது மிகவும் கஷ்டம். ஒரு படத்தில் ஹீரோவின் தகுதிக்கேற்ப காட்சிகளை வைக்க வேண்டும். வளர்ந்து வரும் ஹீரோக்களை திருப்திப்படுத்த மாஸான காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது என கூறியுள்ளார்.