அடேங்கப்பா.. இவ்ளோ பெருசா! நடிகர் சத்யராஜின் குன்னூர் பங்களாவை பார்த்தீங்களா!! வாயைபிளந்த ரசிகர்கள்!!sathyaraj-gunnoor-estate-bungalow-photo-viral

தமிழ் சினிமாவில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து 80ஸ் காலக்கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். வில்லனாக மிரட்ட கூடியவராகவும், ஹீரோவாக நக்கல், காமெடி மற்றும் காதலில் அசத்த கூடியவராகவும் விளங்கிய நடிகர் சத்யராஜ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

நடிகர் சத்யராஜ் இறுதியாக வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சத்யராஜ் சிவகார்த்திகேயன் உடன் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு சிபிராஜ், திவ்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

Sathyaraj

சிபிராஜ் தமிழ் சினிமாவில் கதாநாயனாக பல படங்களில் நடித்துள்ளார் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.  சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் திவ்யா குன்னூரில் இருக்கும் எஸ்டேட் பங்களாவின் புகைப்படத்தை பகிர்ந்து எனக்கு மிகவும் பிடித்த இடம் என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய பங்களாவா என வாயடைத்துப் போயுள்ளனர்.