சினிமா

கொடுத்து வச்ச மனுஷன்யா.. அடஅட சதீஷ் கூட இருக்குறது யார்னு பார்த்தீங்களா! வயிறெரியும் இளசுகள்!!

Summary:

கொடுத்து வச்ச மனுஷன்யா.. அடஅட சதீஷ் கூட இருக்குறது யார்னு பார்த்தீங்களா! வயிறெரியும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சதீஷ். மேலும் அவர் தற்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

அவ்வாறு தற்போது அவரது நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து சதீஷ் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் பாலிவுட் கவர்ச்சி புயல், இளசுகளின் கனவுக்கன்னி சன்னி லியோனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சதீஷ் சன்னிலியோனுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், சன்னிலியோன் மிகவும் இனிமையானவர்,  நான் திரையுலகில் இவ்வளவு இனிமையான ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை. அவர் ஒரு நல்ல நடிகை மற்றும் டான்சர். அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு ஒரு வரம் என்றும் பதிவிட்டுள்ளார்.

 


Advertisement