நடிகர் சதீஷ் திருமணம் செய்துகொள்ளப்போவது இந்த பிரபல இயக்குனரின் தங்கையையா? ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஜெர்ரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ். அதனை தொடர்ந்து அவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து காமெடியில் கலக்கிய அவர் தற்போது மிகவும் பிஸியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சதீஷ் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முதலில் இது உண்மைதானா என ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், பின்னர் அதனை உறுதி செய்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமணம் விரைவில் நடைபெறும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சதீஷ் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது அதாவது சதீஷ் திருமணம் செய்யவிருக்கும் பெண் சமீபத்தில் வைபவ் நடிப்பில் வெளிவந்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாச்சியின் தங்கையாம்.
சாச்சியின் குடும்பத்தினர்கள் அவரது தங்கைக்கு மாப்பிள்ளை தேடி வருகின்றனர் என தகவலறிந்த சதீஷ் தனது குடும்பத்தினர் மூலம் சாச்சியிடம் பெண் கேட்டு பேசியுள்ளார். இதற்கு முதலில் சாச்சியின் குடும்பத்தினர் மறுத்தாலும் பின்னர் ஒத்துக்கொண்டனர் என தகவல்கள் வெளிவந்துள்ளது.