அட.. செம மாஸ்! வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட டான்ஸிங் ரோஸ்! வைரலாகும் வீடியோ!!

அட.. செம மாஸ்! வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட டான்ஸிங் ரோஸ்! வைரலாகும் வீடியோ!!


sarpatta paramparai dancing rose dance to vathi coming song

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் செம ஹிட்டானது.

அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பெருமளவில் பிரபலமானது. மேலும் அப்பாடலுக்கு விஜய் போட்ட ஆட்டம் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. இந்நிலையில் சிறுவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமடைந்த ஷபீர் அண்மையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.