சரோஜா படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையா இது? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

சரோஜா படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையா இது? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!


saroja-actress-nikitha-current-photo

2008 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்றபடத்தில் வந்த கவர்ச்சியான பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர்தான் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

அதனை தொடர்ந்து 2002 ஆம் ஹாய் என்ற தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயாகியாக நடித்தார், தமிழில் குறும்பு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

Venkat prabu

அதன்பின்னர் கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்தார். பின்னர் ஒரு சில விவகாரங்கலால் கன்னட சினிமாவை விட்டு விலகிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2017 ஆம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிகிதா. நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் குடும்பத்துடன் நிகிதா எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Venkat prabu