திரையரங்குகளில் வெளியிடப்பட்ட சர்க்கார் டீசர்; தீபாவளியை இப்போதே கொண்டாடத் துவங்கிய விஜய் ரசிகர்கள்!

திரையரங்குகளில் வெளியிடப்பட்ட சர்க்கார் டீசர்; தீபாவளியை இப்போதே கொண்டாடத் துவங்கிய விஜய் ரசிகர்கள்!


sarkar teaaser in teatre

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், விஜய் நடிக்கும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் "சர்கார்" படத்தின் டீசர், விஜய தசமி தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

sarkar teaaser in teatre

சமூகவலைத்தளங்களில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல்வேறு திரையரங்குகளிலும் இந்த டீசர் வெளியானது. திரைப்படத்தினை பார்ப்பது போன்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் டீசரை பார்த்து ரசித்தனர்.

விஜய் தோன்றும் காட்சிகளுக்கும் அவர் பேசிய வசனங்களுக்கும் ரசிகர்கள் கைத்தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.யூட்யூபில் வெளியான பத்து நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தொட்டது சர்க்கார் டீசர். வெளியான இரண்டு மணிநேரத்தில் இதுவரை ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது சர்க்கார் டீஸர்.