உலகம் சினிமா

கடல் கடந்து சாதிக்க இருக்கும் சர்க்கார்; மிகுந்த உற்சாகத்தில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள்.!

Summary:

sarkar movie release to polanthu

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படம் விரைவில் வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இப்படம் தற்போது போலந்து நாட்டிலும் திரையிட உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்,  ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

Image result for sarkar

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளது இந்நிலையில்,

இப்படம் போலந்து நாட்டின் டான்ஸ்க், வார்ஷா, ரோக்லாவ், கிராகோவ் ஆகிய முக்கிய 4 நகரங்களில் திரையிட உள்ளதாகவும் அதுகுறித்து வெளியாகும் தேதி, விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement