சினிமா Deepavali News

சர்க்கார் படம் எப்படி? படம் பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வெளியான விமர்சனம்!

Summary:

Sarkar movie marana mass review from dubai

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகுகிறது சர்க்கார் திரைப்படம். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் சர்க்கார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் சர்க்கார் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்கார் படம் பற்றி பேசிய அவர் படம் மிகவும் அற்புதமாக உள்ளது என்றும் படம் முழுக்க நடிகர் விஜய் மாஸ் வசனங்களை தெறிக்கவிட்டுள்ளார் என்றும், படத்தின் கதை, திரைக்கதை, ஆக்க்ஷன் காட்சிகள் அனைத்திலும் விஜய் மிரட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படம் முழுவதும் அசத்தலாக உள்ளது எனவும் படம் மாபெரும் வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இசைப்புயல் AR ரஹ்மானின் இசை மெர்சலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் உமைர் சந்து. இதை கேட்ட தளபதி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


Advertisement