சினிமா

10 நாள், பாக்ஸ் ஆபிஸை கதறவிட்ட சர்க்கார் திரைப்படம்! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Summary:

Sarkar movie 10 days collection report

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படத்தின் முதல் போஸ்டர் வெளியானதில் இருந்து இன்று வரை பல பிரச்சனைகளை சந்தித்தது சர்க்கார் திரைப்படம். படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் பிரச்னை பண்ண பின்னர் அவருடன் சமரசம் பேசப்பட்டது.

பின்னர் படத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக பல விமர்சனங்கள் இருப்பதாக தமிழககம் முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் சர்க்கார் படத்தின் வசூல் குறித்து பலவேறு செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் படத்தின் வசூல் எவ்வளவு என செய்திகள் வெளியாகியுள்ளன அதன்படி முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 214.3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெர்சல் பட மொத்த வசூலையும் முறியடித்து சர்கார் புதிய சாதனையை நோக்கி இருக்கிறது. 


Advertisement