சினிமா

சர்க்கார் டீசர் வெளியானது மாஸ் காட்டிய தளபதி விஜய்

Summary:

sarkar desar

மரண மாஸ் காட்டிய விஜய் சர்க்கார் டீசர் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக கொண்டாட்டத்தில் உள்ளனர்   

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "சர்கார்". துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய், முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்துள்ளது.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் கூட்டணி 4-ஆவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.இன்று 6 மணிக்கு டீசர் வெளியானது ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 ரசிகர்கள் இப்பவே மிகவும் உற்சாகமாக படம் பார்ப்பது போன்று  டீசர் பார்த்து உள்ளனர்.சமூகவலைத்தளங்கள் மட்டும் இல்லாமல் உலகமெங்கும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது      

டீசர்:

https://youtu.be/VkkyaodksT4


Advertisement