சர்கார் படத்தில் வில்லி பெயர் வள்ளி என மாற்றப்பட்டது? வெளியான அதிரடி ட்விட்!

சர்கார் படத்தில் வில்லி பெயர் வள்ளி என மாற்றப்பட்டது? வெளியான அதிரடி ட்விட்!



Sarkar controversy name changed from komalavalli to valli

சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.  தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

Sarkar

மேலும் படத்தில் தேவை இல்லாத காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் சர்க்கார் படத்தில் படத்தின் வில்லியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் பெயர் கோமலவல்லி. இந்த பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த பெயருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகவும், கோமளவள்ளி என்ற பெயரை வள்ளி என்று மாற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ட்விட்டர் பதிவு ஓன்று வைரலாகிவருகிறது.