சினிமா

சீரியலில் வாய்ப்பு இல்லை என்பதால் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா எடுத்த அதிரடி முடிவு!

Summary:

Saravanan meenatchi rakshitha new business plan

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஓன்று சரவணன் மீனாட்சி. இதுவரை பல சரவணனை பார்த்துள்ளது விஜய் டிவி.  எத்தனையோ சரவணன் மாறி மாறி நடிச்சாலும் மீனாட்சி மாட்டும் மாறவே இல்லை. இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ரஷிதா.

இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் முடிவடைந்ததை அடுத்து வேறு தொடரிலோ அல்லது படத்திலோ வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் ரக்ஷிதா.

இந்நிலையில் பெண்களுடன் இணைந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோமூலம் தெரிவித்துள்ளார் ரக்ஷிதா.இந்த வீடியோவை பார்த்துவிட்டு பலரும் சீரியலில் வாய்ப்பில்லை என்பதற்காக இப்படி ஒரு முடிவா என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement