சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய விஜய் டிவி சரவணன் மீனாட்சி ரக்ஷிதா! புகைப்படம் இதோ!

Summary:

Saravanan meenatchi rakshita latest modern look photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. சீசன் ஓன்று, இரண்டு என பல சீசன்கள் வந்தாலும், பல ஹீரோக்கள் மாறினாலும் கடைசி வரை அணைத்து சீசன்களிலும் மீனாட்சியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் ரக்ஷிதா.

சீரியலையும் தாண்டி 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு என்ற படத்திலும். அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான பாரிஜாதா என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் பிரபலமாகவில்லை.

தற்போது சரவணன் மீனாட்சி தொடரும் முடிவுக்கு வந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாச்சியார்புரம் என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார் ரக்ஷிதா. சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி எப்போதும் குடும்ப பாங்கான பெண்ணாக காட்சியளிக்கும் ரக்ஷிதா திடீரென ஸ்லீவ்லெஸ், மாடர்ன் உடை என பயங்கர மாடர்னாக மாறியுள்ளார்.

இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில.


Advertisement