சினிமா

பெரிய விபத்தில் சிக்கிய சரவணன்-மீனாட்சி சீரியல் நடிகை. அவரின் பரிதாப நிலை, புகைப்படம் இதோ!

Summary:

Saravanan meenakshi serial actress gayatri met accident

காயத்ரி: இவர் ஒரு பிரபல டான்சர். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஓன்று சரவணன் மீனாட்சி. இதன் முந்தைய பாகத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அரண்மனை கிளி என்ற தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி என்ற நடன போட்டியை ஆரம்பிக்கிறது விஜய் தொலைக்காட்சி. இதற்கு முன் ஜோடி நம்பர் ஒன்னு, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரமாண்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது விஜய் தொலைக்காட்சி. இதன் அடுத்த வரிசையில் ஜோடி என்ற புது நடன நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

இதில் சரவணன்-மீனாட்சி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சங்கர பாண்டி என்பவருடன் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். அந்நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு காயத்ரி வரும்போது பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் அவரின் கை எலும்புகள் உடைந்துள்ளது. இந்த தகவலை நடன நிகழ்ச்சியில் சங்கரபாண்டி அறிவிக்க அதோடு அவரின் கையில் எலும்பு எப்படி உடைந்துள்ளது என்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.


Advertisement