சினிமா பிக்பாஸ்

மருத்துவ முத்தம், யாஷிகா- மஹத் இடையேயான நெருக்கம் - இதெல்லாம் தப்பில்லையா பிக் பாஸ்!

Summary:

saravanan

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட நிலையில்  இதே காரணத்திற்காக சரவணனை பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.இதனால் போட்டியாளர்களா கடும் வருத்தத்தில் உள்ளனர்.

aarav and oviya க்கான பட முடிவு

இந்நிலையில் பலர் சரவணனுக்கு எதிராக எதிர்ப்புக் குரலை எழுப்பினாலும் , சிலர் அவருக்கு ஆதரவு பேசி வருகின்றனர்.அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் முதல் இரண்டு சீசன்களில் நடைபெற்ற நிகழ்வுகள்தான்.

அதாவது பிக்பாஸ் 1 ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் ஆரவ்  ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்துள்ளார். மேலும் இரண்டாவது சீசனில் மஹத் மற்றும் யாஷிகா காதல் நிகழ்வுகள்.

அதிலும் யாஷிகா- மஹத் இருவரும் ஒரே படுக்கையில் படுப்பது, நெருங்கி பழகுவது என இவர்கள்  செய்தது ரொம்பவே ஓவர் தான்.பெண்களை இழிவுபடுத்தி விட்டார் என சரவணனை தண்டித்த பிக்பாஸ் ஏன் இவர்களை தண்டிக்கவில்லை? கண்டிக்க கூட இல்லையே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

magath and yashika க்கான பட முடிவு

இதையெல்லாம் கண்டுகொள்ளாத பிக்பாஸ் சரவணன் செய்ததை மட்டும் தவறு என்று கூறுவது சரி இல்லை எனவும் விவாதித்து வருகின்றனர்.
 


Advertisement