சினிமா

அடேங்கப்பா! சரவண ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் பட்ஜட் இத்தனை கோடியா?

Summary:

Saravana stores owner arul new movie budget details

கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் அருள் தனது கடைக்கான விளம்பரத்தில் தானே நடித்து அதன் மூலம் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும், வரவேற்பையும் பெற்றார். அதன்பின்னர் சரவணன் அருள் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

முதலில் இது வதந்தி என மறுக்கப்பட்டது. அதன்பின்னர் சரவணன் அருள் நடிக்க இருப்பது உண்மைதான் என்றும் படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை எடுத்துவரும் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் சரவணன் அருளை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. சரவணன் அருள் நடிக்க இருக்கும் படம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement