சினிமா

முடிவுக்கு வந்தது பிரபல சீரியல். நிம்மதி பெருமூச்சில் ரசிகர்கள்!

Summary:

Saravan meekakshi serial ended

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் வெவேறு கதைக்களங்களுடன் ஒரே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் சரவணன் மீனாட்சி.

முன்னதாக இதன் முதல் பாகத்தில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதன் அடுத்த பாகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக இருந்த ரியோ இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றோடு இந்த சீரியல் முடிவடைந்துவிட்டது, சிலர் ஒரு வழியாக சீரியல் முடிந்ததா என்று கூறி வந்தாலும் இந்த பிரபலங்களை இனி பார்க்க முடியாதே என்று வருத்தப்படுபவர்களும் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் சரவணன்-மீனாட்சி குழுவினருக்கு பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றுள்ளது. இந்த செய்தியை சீரியலில் சங்கரபாண்டி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Advertisement