சினிமா

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு, இந்த மாபெரும் பிரபல நடிகர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

sarathkumar tweet about nerkonda parvai

  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nerkonda parvai க்கான பட முடிவு

இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய சமூக நீதிகருத்து கொண்ட படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. மேலும் பல பிரபலங்களும் இப்படத்திற்கு வாழ்த்துக் கூறிவருகின்றனர்.

sarathkumar க்கான பட முடிவு
 
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகரான சரத்குமார் இப்படத்திற்கு வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடத்தை முறை மற்றும் பெண்களுக்கு எதிரான நுட்பமான சிந்தனை செயல்முறை ஆகியவற்றை நேர்கொண்ட பார்வையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலத்திற்கு தேவையான கருத்து. நடிகர் அஜித் நன்றாக நடித்துள்ளார் என கூறி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 


Advertisement