தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணையும் சுப்ரீம் ஸ்டார்.! அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணையும் சுப்ரீம் ஸ்டார்.! அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!



Sarathkumar may act as father to vijay in thalapathy 66 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

sarathkumar

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. மேலும் தளபதி 66 படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் இணைந்துள்ளார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்து வந்த நிலையில் தற்போது சரத்குமார் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.