தனுஷ் படத்தில் இணைந்த சரத்குமார்.. வெளியான அசத்தல் தகவல்.!

தனுஷ் படத்தில் இணைந்த சரத்குமார்.. வெளியான அசத்தல் தகவல்.!



Sarathkumar in dhanush direct movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அமலா பால், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

DD3

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எந்த திரைப்படம் இளம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் குறித்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன், பவிஷ், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

DD3

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய கதாபாத்திரம் இந்த படத்தின் ஆணிவேராக இருக்கும் என கூறப்படுகிறது.