சூப்பரோ சூப்பர்.. மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
மகளிடம் மன்னிப்பு கேட்கும் நடிகர் சரத்குமார்! என்ன காரணம் தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான வரலக்ஷ்மி தற்போது பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.
ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவருகிறார் வரலக்ஷ்மி. இந்நிலையில் தனது மகள் வரலக்ஷ்மியிடம் தான் மன்னிப்பு கேட்க விரும்புவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
என் மகளின் முதல் படமான போடோ போடியின்போது அவருக்கு எந்த உதவியும் நான் செய்யவில்லை. அதற்காக நான் வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என் மகளின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பார்க்கும்போது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.