அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சாந்தி டீச்சர் தற்கொலை வழக்கில் புது திருப்பம்! காரணமாக இருந்த காதல், திருமணம்!
சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பள்ளி ஆசிரியை ஹரி சாந்தி என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. 5 வருடங்களுக்கு முன்னர் தான் வேலை பார்த்த கல்லூரிக்கு தனது நண்பர்களை பார்க்கவந்த சாந்தி தான் பாடம் எடுத்த வகுப்பிலையே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிரியையின் மரணத்திற்கு என்ன காரணம் என போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் ஹரி சாந்தி கல்லூரியில் யாரையெல்லாம் சந்தித்தார் என்ற பட்டியலை திரட்டினர். அதில், அங்கு வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவரை ஹரி சாந்தி அடிக்கடி சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியரிடம் விசாரித்ததில், ஹரிசாந்தியும் நானும் காதலித்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனது திருமணத்திற்கு பிறகும் சாந்தி என்னை சந்திக்க வருவார் என்றும், நீ மட்டும் மனைவி, குழந்தைகள் என சந்தோசமாக இருக்கின்றாய்.

நான் இன்னும் உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும், சம்பவத்தன்று தன்னை சந்தித்தபோது நீ என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டாய் என கூறிவிட்டு சாந்தி சென்றுவிட்டார். அதன்பிறகு நானும் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
மறுநாள்தான் சாந்தி தற்கொலை செய்துகொண்ட தகவல் தனக்கு தெரியும் என அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஹரிசாந்தியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும், அவரது கையில் காயம் இருப்பதால் தொடர்ந்து அந்த ஆசிரியரிடம் விசாரித்துவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.