BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"நாங்கள் முரண்பாடான ஜோடி!" சாந்தனு - கீர்த்தி ஜோடி வீடியோ வைரல்!
பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் 1998ம் ஆண்டு தனது தந்தை பாக்யராஜின் "வேட்டிய மடிச்சுக்கட்டு" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து இவர் 2008ம் ஆண்டு "சக்கரக்கட்டி" என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.

இதையடுத்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்த சாந்தனு, தொடர்ந்து தமிழில் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், குரு, கசட தபற, நீல நட்சத்திரம், ராவணக்கோட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே 2015ம் ஆண்டு பிரபல தொகுப்பாளினி கீர்த்தி விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சாந்தனு. கிக்கி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு கீர்த்தி பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி அவர்களின் மகள். ஜெயந்தி, கலா மற்றும் பிருந்தா மாஸ்டரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாந்தனு தனது இன்ஸ்டாவில் தனது மனைவியை கலாய்த்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "என் மனைவிக்கு OCD பிரச்சனை இல்லை. நாங்கள் ஒரு முரண்பாடான ஜோடி. அவ்வளவு தான். உங்களில் எத்தனை பேருக்கு இப்படி?" என்று அந்த வீடியோவில் கேட்டுள்ளார்.