சினிமா

நெருங்கிய நண்பரின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்..! மனவேதனையுடன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு.!

Summary:

Santhanam sadly told about sethu in him twitter

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன். இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். 36 வயதே ஆன இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் சேதுராமனின் இறுதி சடங்கிற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதில் சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் கலந்து கொண்டு அவரின் சடலத்தை சுமந்து செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் சந்தானம் தனது நண்பரின் புகைப்படத்தை வெளியிட்டு அதில், என் நெருங்கிய நண்பர் டாக்டர் சேதுவின் மறைவால் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்திருக்கிறேன்.அவரது ஆன்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.Advertisement