அச்சச்சோ.. சந்தானம் பட நடிகைக்கு இத்தனை பிரச்சனைகள் இருந்ததா?.. தனது மறுபிறப்பென போட்டோஸை வெளியிட்டு கூறிய நடிகை..!!



Santhanam Movie Actress Vishaka Singh Health Issue

 

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்த நடிகை விஷாகா சிங். இவர் தமிழில் குறைந்த அளவிலான படத்தில் நடித்து பின்னால் மார்க்கெட்டை இழந்து தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

மேடைப்பேச்சாளராகவும் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சில நாட்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறுகையில், "நான் எப்போதும் வீழ்ந்து விட மாட்டேன். அடுத்தடுத்த பல நிகழ்வுகள், விபத்துக்கள், உடல் நல பிரச்சனைகள், குளிர், வெயில் போன்ற மாற்றங்கள் என்னை வாட்டி வதைத்துவிட்டது.

ஏப்ரல் மாதத்தில் நான் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைந்துள்ளேன். இது எனது மறுபிறப்பாக கூட இருக்கலாம். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.