அடேங்கப்பா.. மாஸ் காட்டும் குலுகுலு.. கல்லா கட்டிய கலெக்ஷன்..! சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?.! 

அடேங்கப்பா.. மாஸ் காட்டும் குலுகுலு.. கல்லா கட்டிய கலெக்ஷன்..! சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?.! 


Santhanam Kulu Kulu Movie

நகைச்சுவை நாயகனாக முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற நடிகர் சந்தானம். இவர் விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில் சிறந்த காமெடியனாக பல வருடங்களுக்கு தொடர்ச்சியாக விருது பெற்றிருந்தார். 

நடிகர்களுடன் மட்டும் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த சந்தானம், தனது டிராக்கை மாற்றி காமெடியனாக நடிக்காமல், முழுநேர கதாநாயகனாக தனது இயல்பான நகைச்சுவை கலந்த படங்களில் கலக்கலாக நடித்துவந்தார். அதுபோன்று சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் "குலு குலு". 

Santhanam

இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு பல நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜூலை 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான குலு குலு திரைப்படம் இரண்டாவது வாரத்தை கண்டுள்ளது. தற்போது வரை இந்த படம் சென்னையில் ரூ.89 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.