ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
ஒரே நேரத்தில் 2 ஓடிடி தளத்தில் ரிலீஸான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். தற்போது இவர் ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய கடைசியாக வெளியான நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

காமெடி கதை களத்தில் உருவான இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலீஸுக்குப் பிறகு நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகி வருகிறது. சந்தனம் நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.