பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தன் நண்பனுக்காக தளபதி செய்த மாஸான காரியம்! செம ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தன் நண்பனுக்காக தளபதி செய்த மாஸான காரியம்! செம ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


sanjeev-wife-shares-about-thalapathy-vijay

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்று தற்போது அக்ஷரா, சிபி, ராஜு, பிரியங்கா, வருண், தாமரை, பாவனி, அமீர், சஞ்சீவ் உள்ளிட்ட போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இவர்களில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து வருபவர் சஞ்சீவ். இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பராவார். தேவைப்படும் இடங்களில் தனது வாதங்களை மிகவும் சரியாக வைத்து வருகிறார்.

bigboss

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது அவர் தனது கணவர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு, தினமும் அவரது நண்பர்கள் விஜய் உட்பட மூன்று பேராவது போன் செய்து என்னையும், குழந்தையையும் நலம் விசாரிப்பார்கள்.

அதேபோல சஞ்சீவ் நாமினேட்டான நிலையில், அவருக்கு வாக்களிக்கும்படி தளபதி உட்பட அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியதாகவும், அதனைக் கண்ட விஜய் கண்டிப்பாக செய்றேன்மா, கவலைபடாதீர்கள்  என கூறியதாகவும் ப்ரீத்தி தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.