சினிமா

பெரிய மனசு தான்..! சஞ்சீவ் தனது சகோதரருக்கு கிப்ட் ஆக என்ன கொடுத்துள்ளார் பார்த்தீங்களா...! வைரலாகும் புகைப்படம் இதோ...

Summary:

பெரிய மனசு தான்..! சஞ்சீவ் தனது சகோதரருக்கு கிப்ட் ஆக என்ன கொடுத்துள்ளார் பார்த்தீங்களா...! வைரலாகும் புகைப்படம் இதோ...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்தார். செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்தார். 

இந்த நிலையில் தொடரில் கணவன் மனைவியாக நடித்த இருவரும் உண்மையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளதால் ராஜா ராணி 2 தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.  மேலும் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில்  நடித்துவருகின்றார்.

இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் பல சொகுசு கார்களை வைத்து இருக்கின்றனர். கடந்த வருடம் மகள் ஐலாவின் பிறந்தநாளுக்கு ஒரு காரை சஞ்சீவ் கிப்ட் செய்தார். தற்போது ஞ்சீவ் தான் ஏற்கனவே வைத்திருந்த Mercedes C- class காரை தனது சகோதரருக்கு கிப்ட் ஆக கொடுத்ததை  தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்....


Advertisement