சினிமா

15 வயதில் 50 முறை முத்தம், பிரபல இயக்குனரின் மீது பாலியல் புகார் அளித்த டார்லிங் நடிகையின் சகோதரி.! யார் தெரியுமா?

Summary:

sanjana kalrani sex abuse complaint on director

தமிழ் சினிமாவில் யாகாவாராயினும் நா காக்க, டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. 

இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி.இவர்  சிறு வயதிலேயே கன்னடதிரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக  இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனக்கு 15 வயதில் இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா பாலியல்தொல்லை கொடுத்ததாக அதிரடியாக குற்றசாட்டை வைத்துள்ளார்.ravi srivatsa க்கான பட முடிவு

அகன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் சஞ்சனா கல்ராணி கடந்த 2006ஆம் ஆண்டு 'கண்ட ஹெண்டதி' என்ற கன்னட படத்தில் நடித்தார். மல்லிகா ஷெராவத் நடித்த 'மர்டர்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சியை வேண்டும் என்றே 50 முறை எடுத்து தனக்கு இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா பாலியல் தொல்லை 
 கொடுத்தார் என கூறியுள்ளார்.

இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா முழுமையாக மறுத்தார். 

மேலும் இதற்கு சஞ்சனா நான் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் குறித்து நான் எந்த குற்றச்சாட்டையும் இதுவரைக்கும் கூறவில்லை. இவர் தவறானவர் என்பதால் தான் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றேன், எந்த திருடராவது தன்னை திருடர் என்று ஒப்புக்கொண்டது உண்டா?'என கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement