"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்குகிறாரா இந்த பிரபல நடிகை!! அவரது கணவரே அளித்த சுவாரஸ்ய தகவல்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் யார் வருகிறார்கள் என்ற பேச்சுகள் தற்போதே துவங்கிவிட்டது. இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் நடிகை சங்கீதா பிக்பாஸ் 3 வீட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இதனை கண்ட நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் நான் அனுப்ப வாய்ப்பே இல்லை என பதிலளித்து பதிவிட்டுள்ளார்.
Naan Anuppa Chance illa...😁🤣 https://t.co/00TMNV5Hjn
— KRISH (@krishoffl) 16 July 2019