சினிமா

மீண்டும் அதிரடியாக களமிறங்கிய மக்கள் செல்வன்.! பட்டையை கிளப்பும் சங்க தமிழன்!! மரணமாஸ் வீடியோ இதோ..

Summary:

sangatamilan teaser released now

தமிழ் சினிமாவில் குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. திரைத்துறையில் இதுவரை 25 படங்களைக் கடந்திருக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு 7 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், பேட்ட, 96 போன்ற படங்கள் வெளியாகின. கடலை மையமாக கொண்டு விஜய் சேதுபதி நடித்த 96 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சிந்துபாத் படம் வெளியானது.

சங்கத்தமிழன் க்கான பட முடிவு

இந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி தனது 30ஆவது படமான சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் விஜயா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. வாலு மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், ஜான் விஜய், சூரி, நாசர் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சங்கத்தமிழன் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.


 


Advertisement