சினிமா

பிக்பாஸ் சாண்டி தற்போது மனைவி, மச்சினிச்சியுடன் யாரை சென்று சந்தித்துள்ளார் பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

Sandy meet kamal with family

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் மூன்று மாதங்களாக மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்றார். நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

 பிக் பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை செய்துகொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர் சாண்டி அவர் இருக்குமிடத்தில்  எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்க்க அவரும்  ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். மேலும் அவருக்கு போட்டியாளர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் ரசிகர்களாக இருந்தனர்

 இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாண்டி தனது சக போட்டியாளர்களும் நண்பர்களுமான கவின், முகேன், 
 தர்ஷன் ஆகியோருடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வந்தார். அதனை தொடர்ந்து அவரது நடன குருவான கலா மாஸ்டரை சந்தித்தார். இவ்வாறு முழுவதும் பிசியாக இருந்த சாண்டி தற்பொழுது நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருமான உலக நாயகன் கமல்ஹாசனை தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement