சினிமா

டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது அசத்தலான திறமையால் பெருமள

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது அசத்தலான திறமையால் பெருமளவில் முன்னேறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் சாண்டி மாஸ்டர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இங்கு சக போட்டியாளர்களான தர்ஷன், கவின், முகேனுடன் சேர்ந்து செய்த சேட்டைகள், கலகலப்பான காமெடிகள் பிக்பாஸ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.

நடன இயக்குனர் சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு 3 வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில்  சில்வியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் சாண்டி அறிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் அவருக்கு மிகவும் கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சாண்டியின் மனைவி சில்வியாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement