பிக்பாஸ் கவின் மற்றும் சாண்டி தற்போது யாரை சந்தித்துள்ளார்கள் பார்த்தீர்களா!! இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிக்பாஸ் கவின் மற்றும் சாண்டி தற்போது யாரை சந்தித்துள்ளார்கள் பார்த்தீர்களா!! இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!


Sandy kavin meet saravanan

கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பருத்திவீரன் சித்தப்பு சரவணன். இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வெளிப்படையாக இருந்துவந்தார். மேலும் கவின், சாண்டி ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

Sandy

இந்நிலையில்  கமலிடம் பேசுகையில் அவர் தானும் பேருந்தில் பெண்களை உரசியுள்ளதாக கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையை கிளப்பி கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எவ்வித காரணமுமின்றி இரவோடு இரவாக சரவணனை வீட்டை விட்டு வெளியேற்றியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் மட்டும் சாண்டி ஆகியோர் சித்தப்பு சரவணன் நேரில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் அத்தகைய புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.