தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் வீட்டில் நேர்ந்த துக்கம்! முகேன் தந்தையை தொடர்ந்து மீண்டும் ஒரு உயிரிழப்பு!

தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் வீட்டில் நேர்ந்த துக்கம்! முகேன் தந்தையை தொடர்ந்து மீண்டும் ஒரு உயிரிழப்பு!


Sandy father in law dead

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தவர் பாடகர் முகேன் ராவ் . அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தவர் சாண்டி.

 இவர்கள் இருவரும் தங்களது குணத்தாலும், நடவடிக்கைகளாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ரசிகர்களும் அவர்களுக்காக மிகவும் மனம் வருந்துவர். 

Sandy

 இந்நிலையில் பிக்பாஸ் வின்னரான மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேனின் தந்தை பிரகாஷ் ராவ், 52 வயது நிறைந்த அவர் நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த இரங்கல்களை தெரிவித்து வந்தனர். 

 இந்த சோகம் மறைவிற்கு முன்பாகவே பிக்பாஸ் வீட்டில் தனது கலகலப்பான பேச்சால் பல உள்ளங்களையும் கவர்ந்த பிக்பாஸ் ரன்னரான நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிலும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.  அதாவது சாண்டியின் மனைவி சில்வியாவின் தந்தை டேவிட் சுந்தர்ராஜ் தற்போது உயிரிழந்துள்ளார். சாண்டியின் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.