டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் நடந்த விசேஷம்! வாவ்.. லாலா பாப்பா எப்படி வளர்ந்துட்டாரு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் நடந்த விசேஷம்! வாவ்.. லாலா பாப்பா எப்படி வளர்ந்துட்டாரு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!



sandy daughter lala birthday photo viral

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது திறமையால் கலகலப்பான பேச்சால் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாண்டி. அதனைத் தொடர்ந்து அவர் சினிமாக்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் செய்த கலகலப்பான காமெடிகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதுமட்டுமின்றி அவர் பாய்ஸ் குரூப் என்ற பெயரில் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து அடித்த அரட்டைகள் வேற லெவல்.

 சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சில்வியா தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார். அதை தொடர்ந்து அண்மையில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது லாலாவின் பிறந்தநாள் வீட்டிலேயே மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விதவிதமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் லாலா பாப்பாவா இது! நல்லா வளந்துட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.