தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வாவ்.. சாண்டியுடன் கியூட்டாக ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்! யார்னு பார்த்தீங்களா! இணையத்தை கலக்கும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. லாஸ்லியா ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பெருமளவில் வைரலாகி வருகிறது. சாண்டி மற்றும் லாஸ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக, நல்ல நண்பர்களாக இருந்து அனைவரையும் கவர்ந்தனர்.