சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் மகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! அரங்கத்தினை நெகிழவைத்த காட்சி!

Summary:

Sandy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் 105 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.

 சாண்டி பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். மேலும் அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். 

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றில் சாண்டிக்கு சிறந்த பொழுது போக்காளார் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. அப்போது மேடைக்கு தனது குழந்தையையும் அழைத்து வந்து லாலாவின் கழுத்தில் விருதை வழங்கி சிறப்பித்துள்ளார். 


Advertisement