சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா? கடுப்பான சாண்டியின் மனைவி!

Summary:

sandi wife getting angry


கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின், முகேன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். 

இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும். இந்நிலையில் யார் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போகிறார் என் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. இதற்கிடையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டி பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த பதிவிற்கு முகேனின் ரசிகர் ஒருவர் அதில் , சாண்டிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு  பதிவிட்டிருந்தார். சாண்டி மனைவியின் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், .பட்டத்தை வெல்ல முகென் தான் தகுதியுடையவர். அவர் பன்முக திறமை கொண்ட நபர். எனவே, அவர் தான் இந்த சீசனில் வெற்றி பெற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த சாண்டியின் மனைவி, உங்களுக்கு முகெனை பிடிக்கும் என்றால் ஆதரவளியுங்கள். அதற்காக அடுத்தவர்களை குறைத்து கூற வேண்டாம். உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு நீங்கள் ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் .


Advertisement