சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மோகன் வைத்யா.! பெண்களிடம் செய்யுற சில்மிஷத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

Summary:

sandi behave as mohan vaithya in bigboss house

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

bigg boss 3 tamil க்கான பட முடிவு

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில், இந்த வாரம் அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்வதற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் மோகன் வைத்யா குறைவான வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது நடன இயக்குனர் சாண்டி மோகன்வைத்யா போன்று உடையணிந்து பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடம் கட்டிப்பிடித்து பேசுவது, முத்தம் கொடுப்பது என காமெடி செய்துள்ளார்.இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement