அடேங்கப்பா.. தலைவி வேற லெவல்! வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த பிக்பாஸ் சனம்! வைரலாகும் வீடியோ!!sanam-shetty-work-out-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டிலும் எதற்கும் தயங்காமல் மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாக தைரியமாக பேசினார். இதனால் சக போட்டியாளர்கள் சிலர் அவரை எதிர்த்தனர். 

 ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.  பெரும் ரசிகர் கூட்டமும் உருவானது. இந்நிலையில் சனம் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பாதியிலேயே வெளியேற்றபட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சனம் வெளியேறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாமல் ரசிகர்கள் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அவரது ரசிகர்கள் தலைவி வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.